ETV Bharat / international

கே.எஃப்.சி போட்டியில் வென்ற முதல் ஜோடி - திருமணத்தில் குவிந்த கே.எஃப்.சி சிக்கன்!

author img

By

Published : Mar 3, 2020, 3:22 PM IST

கான்பெரா: போட்டியில் வெற்றி பெற்ற ஜோடிக்கு கே.எஃப்.சி ஸ்டைலில் திருமணம் நடைபெற்றது விருந்தினர்களை வெகுவாக கவர்ந்தது.

KFC wedding competition
கே.எஃப்.சி

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் தூவூம்ப பகுதியைச் சேர்ந்தவர்கள் கேட் - ஹாரிசன்கேன் இணையர். இவர்கள் செப்டம்பர் 2019ஆம் ஆண்டு, கே.எஃப்.சியின் திருமணப் போட்டியில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அங்குள்ள ஃபுட் தீம் உணவகத்தில் நடந்த திருமணம் தொடர்பான போட்டியில், இந்த இணையர்கள் கலந்துகொண்டு வெற்றி அடைந்துள்ளனர். இதனிடையே இவர்கள் தான் போட்டியின் வெற்றியாளர்கள் என்பதால், கே.எஃப்.சி நிறுவனம் சார்பில் திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

KFC wedding competition
கென்டக்கி ஃபிரைடு சிக்கன் சேவை

திருமண விழாவிற்கு 150க்கும் அதிகமான விருந்தினர்கள் வருகை தந்திருந்தனர். அப்போது, மேடைக்கு வந்த கேட் - ஹாரிசன் இணையர், ' கே.எஃப்.சி நடத்திய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், கே.எஃப்.சி தீமில் எங்களது திருமணம் நடைபெறுகிறது. இந்த முறையில் திருமணம் செய்யும் முதல் தம்பதியினர், நாங்கள் தான்' என அறிவித்தனர்.

KFC wedding competition
கே.எஃப்.சி ஸ்டைல் திருமணம்

இதைக் கேட்ட விருந்தினர்கள் மிகவும் ஆச்சரியத்தில் உறைந்தனர். ஏனென்றால் சாதாரண திருமணம் அல்ல; இது கே.எஃப்.சி நடத்தும் விழா என்றால் சொல்லவா வேணும்.

விழாவிற்கு திடீர் என கொண்டுவரப்பட்ட கே.எஃப்.சி பக்கெட் சிக்கன், கே.எஃப்.சி அமைப்பிலான திருமண கேக், ஒரு புகைப்பட சாவடி, பிரபலமான கே.எஃப்.சி உணவு வண்டி என திருமண விழா கோலாகலப்பட்டது. இதுமட்டுமின்றி, ஆடல் - பாடல் என அதிகாலை வரை திருமண விழா களைகட்டியது.

KFC wedding competition
முத்த மழையில் கே.எஃப்.சி திருமணம்

முன்னதாக இந்த ஜோடியின் முதல் சந்திப்பும் கே.எஃப்.சியில் தான் நடைபெற்றுள்ளது. பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து இருவரும் தங்களது திருமண முடிவை வெளியே கூறியுள்ளனர்.

கே.எஃப்.சி செப்டம்பர் 2019ஆம் ஆண்டு தான், புதிதாக திருமண சேவையை அறிவித்த நிலையில், இதுவரை இந்த சேவையில் பயன் அடைய ஆர்வம் தெரிவித்து 2ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'நாலு வருஷ ஆசை' - கல்லூரி மாணவிக்கு டேட்டிங் ரெஸ்யூம்... விளையாட்டா சொன்னதற்காக இப்படியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.