ETV Bharat / international

அசாம் வெள்ளம்: இரங்கல் தெரிவித்த ரஷ்ய அதிபர் - அசாம் வெள்ளம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளம் கடும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர்
ரஷ்ய அதிபர்
author img

By

Published : Jul 23, 2020, 5:34 PM IST

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் புயல் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு தொடர் தாக்கத்தை ஏற்படுத்துவருகிறது. குறிப்பாக, அசாம் பார்பேடா மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய இருவர் (ஜூலை 22ஆம் தேதி) நேற்று உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 89ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

26.32 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்துவருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. பிகாரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 19 குழுக்கள் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே கூடாரங்களை அமைத்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் பல பகுதிகள் வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் பிரதமர் மோடிக்கும் ரஷ்ய அதிபர் புதின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அன்புக்குரியவர்களை தொலைத்தவர்களின் துயரத்தை ரஷ்யா பகிர்ந்துகொள்கிறது. படுகாயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய நம்பிக்கை தெரிவிக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்கா - சீனா இடையே முற்றும் மோதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.