இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையேயான வளர்ச்சி கூட்டுறவின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மொரீசியஸ் நாட்டில் புதிய சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் 8 மெகா வாட் சூரிய மின்சக்தி கட்டுமான திட்டங்களுக்கும் இரு பிரதமர்களும் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நமது நட்பு நாடுகளின் தேவைகள், முன்னுரிமைகள், இறையாண்மை, மக்கள் நலன் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்தியா தொலைநோக்குப் பார்வையை மேற்கொண்டுவருகிறது.
2018ம் ஆண்டு அக்டோபரில் நடந்த சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியின் முதல் கூட்டத்தில், ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொகுப்பு நடவடிக்கையை இந்தியா முன்வைத்தது. எட்டு மெகா வாட் சூரிய மின் சக்தி திட்டம் , மொரீசியஸ் சந்திக்கும் 13,000 டன் கார்பன் உமிழ்வு பருவநிலை சவால்களைக் குறைக்க உதவும் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. மெட்ரோ எக்ஸ்பிரஸ் மற்றும் இதர உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக , மொரீசியஸ் அரசுக்கு 190 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும சிறு வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.
இதையும் படிங்க: அடுத்த சில வாரங்களில் உச்சம் தொடும் கோவிட் - உலக சுகாதார அமைப்பு