ETV Bharat / international

ஜப்பான் கப்பலில் இருந்து வெளியேற்றப்படும் பயணிகள் - ஜப்பான் அரசு

டோக்கியோ: ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள 'டைமண்ட் பிரின்ஸஸ்' கப்பல் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இரண்டு வார காலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான பயணிகள் அக்கப்பலில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

Diamond Princess cruise ship
Diamond Princess cruise ship
author img

By

Published : Feb 20, 2020, 7:23 AM IST

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கப்பலில் பயணித்த சிலரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

பயணிகளிடம் தலைவலி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்த தகவல்களை ஜப்பான் சுகாதாரத் துறை பயணிகளிடமிருந்து கேட்டுப்பெற்றுள்ளது. மருத்துவ பரிசோதனை முடிவில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பயணிகளுக்கு கப்பலிலிருந்து வெளியேற அனுமதி தரப்பட்டது.

கப்பலிலிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கிருந்த ஜப்பான் வீரர்கள் உதவினர். பயணிகளில் சிலர் டாக்சிகள் மூலமும் சிலர் ரயில்கள் மூலமும் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

புதன்கிழமை (பிப்ரவரி 19) சுமார் 500 பயணிகள் கப்பலிலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்பலிலுள்ள இரண்டாயிரம் பேரும் வெளியேற பல நாள்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவ மிக ஏதுவான இடமாக இந்தக் கப்பல் உள்ளதாக பல நிபுணர்கள் கருதுகின்றனர். சீனாவுக்கு வெளியே இந்த கப்பல்தான் வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட இடம். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கப்பலிலுள்ள 3,711 பேரில் 542 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கப்பலில் கொரோனா பாதிப்பு குறைந்துவருவதாக ஜப்பான் சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறினாலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. செவ்வாய்கிழமை நடைபெற்ற மருத்துவ சோதனையில் 88 பேரும், திங்கள்கிழமை நடைபெற்ற சோதனையில் 99 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களாக கப்பலில் பணிபுரிந்த பணியாளர்கள், கப்பலிலேயே தங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்பலிலிருந்து மக்களை வெளியேற்றுவது ஜப்பானிய அலுவலர்களுக்கு பெரும் சவலாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி மற்றும் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த பயணிகள் தனி விமானங்கள் மூலம் சொந்த நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

முன்னதாக கப்பலில் சிக்கியிருந்த அமெரிக்கர்கள், அந்நாட்டு விமானம் மூலம் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும் அவர்களுக்கு குறைந்தது இரண்டு வாரங்கள் மருத்துவமனை முகாம்களில் சிகிச்சை அளிக்கப்படும் என்று அமெரிக்கா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'பெரிய டீல் குறித்து பிறகு பார்த்துக்கொள்ளலாம்' - ட்ரம்ப் திட்டவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.