ETV Bharat / international

தடம் புரண்ட ஆஸ்திரேலிய ரயில் - இருவர் உயிரிழப்பு!

சிட்னி: ஆஸ்திரேலியாவின் மெல்போர்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் திடீரென்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

Passenger train detrails
Passenger train detrails
author img

By

Published : Feb 21, 2020, 11:11 PM IST

Updated : Feb 22, 2020, 7:17 AM IST

ஆஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து மெல்போர்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், விக்டோரியா மாகாணத்திலுள்ள வாலான் என்ற இடத்தில் சென்றபோது திடீரென்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்த விபத்தில், ரயிலின் பைலட்டும் ரயிலை இயக்குபவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் இன்ஜினை அடுத்துள்ள ஐந்து பெட்டிகள் தடம்புரண்டன.

தடம் புரண்ட ஆஸ்திரேலிய ரயில் - இருவர் உயிரிழப்பு!

இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசாரணை அலுவலர் பீட்டர் புசினாடோ, "இந்த விபத்தில் இருவர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழப்புகள் அதிகரிக்காமல் இருப்பது பெரும் அதிர்ஷ்டம்" என்றார்.

மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகள் மெல்போர்னுக்கு பேருந்து மூலம் அழைத்து செல்லப்பட்டனர். இந்த ரயில் விபத்து காரணமாக அங்கு ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஜப்பான் சொகுசுக் கப்பல் - மேலும் ஒரு இந்தியருக்கு கொரோனா!

Last Updated : Feb 22, 2020, 7:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.