பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மரியம் அவுரங்கசீப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாகித் அப்பாசி(61), முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் (PML-N) மூத்த தலைவர். கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2018ஆம் ஆண்டு மே வரையிலும் பிரதமராக பணியாற்றிய இவருக்கு தற்போது கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடைய வீட்டிலேயே சுய தனிமையிலிருக்க அறிவுறுத்தப்பட்டார். பிஎம்எல்-என் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரிப், அப்பாசி விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்” என்றார்.
பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷீதுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவரது அலுவலகத்திலிருந்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், “ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷீதுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர் இரண்டு வாரங்கள் சுய தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவகிறது. மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் தவிக்கும் நிலை ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதுவரை 2 ஆயிரத்து 67 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கால் குடும்ப வன்முறை அதிகரிப்பு: மறுப்பு தெரிவித்த மத்திய அமைச்சர்