பாகிஸ்தானில் 'போல்' என்ற பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் முரீத் அப்பாஸ். இவர் செவ்வாய்கிழமை(நேற்று) இரவு துப்பாக்கியால் சுடப்பட்டதில் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர், சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
கராச்சியில் உள்ள கயாபன்-இ-புகாரி என்ற பகுதியில் நடந்த இச்சம்பவத்தில், அவரது நண்பரும் செய்தி வாசிப்பாளருமான கிசார் ஹயாத் என்பவரும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக எழுந்த பிரச்னையில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகக் கூறியுள்ளார்.