ETV Bharat / international

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் அனுமதி - அவசர சட்டத்திற்கு அனுமதி அளித்த பாகிஸ்தான்

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் குடியரசு தலைவர் ஆரிஃப் அல்வி ஒப்புதல் அளித்துள்ளார்.

Pakistan President Arif Alvi approved the new anti-rape ordinance

author img

By

Published : Dec 16, 2020, 2:33 PM IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான குற்ற வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் நாட்டில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த மாதம் பாகிஸ்தான் அமைச்சரவை பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அவசர சட்ட மசோதாவை உருவாக்கியது. இந்த சட்ட மசோதாவிற்கு இன்று அந்நாட்டு குடியரசுத் தலைவர் ஆரிஃப் அல்வி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தச் சட்டத்திற்குப் பிறகு நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறித்து விரைவாக விசாரணை நடைபெறும் என்றும் குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்கள் இந்த வழக்குகளின் விசாரணையை நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர். இதுபோன்ற குற்றங்கள் போதை மருந்துகள் மூலம் நடைபெறுவதை அடுத்து, குற்ற சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட ஆறு மணி நேரத்திற்குள் பாலியல் வன்கொடுமை தடுப்பு பிரிவு பாதிக்கப்பட்டவரிடம் விசாரணையை மேற்கொள்ளுமாறு சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் வன்கொடுமைக்கு உள்ளான நபரை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்கவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான நீதிபதி மற்றும் வழக்கறிஞர் மட்டுமே கேள்விக்கு பதிலளிக்குமாறு வகை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சமூகமே நோய்வாய் பட்டிருப்பதை காட்டும், குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.