பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மருமகன் முகமது சப்தார், கடந்த ஞாயிற்றுக்கிழமை முகமது அலி ஜின்னாவின் கல்லறைக்குச் சென்றிருந்தார்.
அப்போது, "வாக்கிற்கு மரியாதை கொடுங்கள்!" என்ற முழக்கங்களை எழுப்பினார். அந்த முழக்கமானது, பாகிஸ்தானில் 220 மில்லியன் மக்களைக் வழிநடத்தும் நாட்டின் தலைவரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விமர்சிப்பதாக கருதப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் நிலவிவந்த நிலையில், நவாஸ் ஷெரீஃப் மருமகன் முகமது சப்தாரை, அதிரடியாக காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இது குறித்து காவல் துறையினர், "பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஒரு பெண் அளித்த புகாரின்பேரிலே முகமது சப்தார் கைதுசெய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளனர்.