ETV Bharat / international

குவெட்டாவில் குண்டுவெடிப்பு: காவலர் மரணம், 5 பேர் படுகாயம் - பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: குவெட்டாவில் நடந்த குண்டுவெடிப்பால் காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவிவருகிறது.

குவெட்டாவில் குண்டு வெடிப்பு
author img

By

Published : Oct 16, 2019, 11:40 PM IST

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரமான குவெட்டாவில் குண்டுவெடிப்பு நடந்ததாக பாகிஸ்தானின் முன்னணி ஊடகமான டான் நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பானது தங்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.

குவெட்டா நகரத்தின் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும் காவல் துறை வாகனம் அவ்வழியை கடந்துசென்றபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஐந்து நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், இரண்டு வாகனங்கள் உள்பட அருகிலுள்ள சில கடைகளும் சேதமடைந்தன.

சமீப காலமாகவே, பலூசிஸ்தான் மாகாணத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாக உள்ளதால் அம்மாகணத்தில் அமைதியற்ற சூழல் நிலவிவருகிறது.

இதையும் படியுங்க:

ஆப்கானில் அரசுப்படை-தலிபான்கள் தாக்குதல்: 50 அப்பாவிகள் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.