பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சியாகோட் என்ற பகுதியில் ஷவாலா தீஜா சிங் என்ற இந்து கோயில் ஒன்று அமைந்துள்ளது.
1947ஆம் ஆண்டு, இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போது இந்த கோயில் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்திருந்ததால், இது மூடப்பட்டது.
இந்நிலையில், அப்பகுதியில் வாழும் இந்து சமூகத்தினர் அக்கோயிலை திறக்க வலியுறுத்தி நீண்ட காலமாக பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி வந்தனர்.
அதை ஏற்ற பாகிஸ்தான் அரசு, இந்தக் கோயிலை திறக்க உத்தரவிட்டது.