இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கரேனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு 341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகா எல்லை இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் 45 பேரும், கைபர்-பக்துன்கவாவில் 34 பேரும், பஞ்சாபில் 33 பேரும், கில்கிட் பலூசிஸ்தானத்தில் 15 பேரும் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 211 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்புள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் அறியப்பட்ட கரேனா வைரஸ் பரவல் இந்தியா உள்பட 150 நாடுகளில் பரவியுள்ளது.
இந்த வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுக்க இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்: எய்ம்ஸ் மருத்துவர்கள்