பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்தை தனது சமூக வலைதளக் கணக்குகள் வாயிலாக அவமதித்ததாகக் கூறி மூத்த செய்தியாளர் ஒருவரை அந்நாட்டு காவல் துறை கைது செய்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய கராச்சி மாகாணக் கூடுதல் காவல் தலைவர் குலாம் நபி மேமன், ட்ரைப்யூன் பத்திரிக்கையைச் சேர்ந்த பிலால் பரூக்கி, தனது பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகளை பதிவிட்டுள்ளார் எனவும் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளரின் கைதுக்கு கராச்சி செய்தியாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நாட்டின் மனசாட்சியான பத்தரிக்கையாளரின் குரலை ஒடுக்கும் செயலை அரசு மேற்கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: தாலிபான் அமைதி ஒப்பந்தம் குறித்து தோஹாவில் பேச்சுவார்த்தை