பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, தனது பிடிஐ (PTI-Pakistan Tehreek-i-Insaf) கட்சி உறுப்பினர்களுடன் இன்று (ஜூன்.06) உரையற்றினார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார்.
அதில், "இறைவன் வாய்ப்பளித்தால், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலகின் அனைத்து இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களையும் இஸ்லாமாபாத்திற்கு அழைப்பேன். அப்போது அவர்களிடம் காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து, ஒருங்கிணைத்து அணிதிரட்ட திட்டமிட்டுள்ளேன்.
மேலும், பாகிஸ்தானை அவமதிக்கும் விதமான கருத்துகளை கூறுவதை ஆப்கானிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், இரு நாட்டின் பேச்சுவார்த்தையும் முடங்கு சூழல் ஏற்படும்" என எச்சரித்தார்.
காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; இதில் பாகிஸ்தான் உள்ளிட்ட எந்த சர்வதேச நாடுகளும் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என இந்தியா தொடர்ந்து கூறிவருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் காஷ்மீர் விவகாரத்தை கையிலெடுத்துள்ளது இரு நாடுகளிடையே புகைச்சலைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: நைஜீரியாவில் ட்விட்டர் வளைதளம் முடக்கம்