இஸ்லாமாபாத்: பயங்கராவாத தடுப்பு அமைப்பான மத்திய புலனாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பயங்கரவாதிகளின் பட்டியலில் லண்டனை மையமாகக் கொண்டு செயல்படும் முத்தாஹிதா கௌமி இயக்கத்தின் தலைவரான அல்தாஃப் உசேன் மற்றும் முஸ்லீம் லீக் நவாஸின் நசீர் பட் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் 2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களின் சுயவிவரங்கள் அடங்கிய தொகுப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதில், பயங்கரவாதிகளின் தந்தை பெயர், அவர்கள் கடைசியாக இருந்த இடத்தின் முகவரி, அரசால் வழங்கப்பட்ட தகவல்கள் ஆகியவை அடங்கியுள்ளது.
பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 19 நபர்களில் மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்களின் பட்டியல் உள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பால் தேடப்படும் குற்றவாளியாக முதலில் இருப்பவர் முஹம்மது அம்ஜத் கான். இவர் மும்பைத் தாக்குதலில் தொடர்புடையவர். இவர் லஷ்கர்-இ-தொய்பாவின் முன்னாள் உறுப்பினர். இவர் மும்பை தாக்குதலின் போதுபடகு, மோட்டார் என்ஜின் உள்ளிட்ட பல பொருள்களை வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெளியிடப்பட்ட ஆயிரத்து 210 பேரின் பட்டியலில் கைபர் பக்துன்க்வாவைச் சேர்ந்த 737 பேரும், பஞ்சாபை சேர்ந்த 122 பேரும், சிந்த் பகுதியைச் சேர்ந்த 100 பேரும், இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த 32 பேரும், கில்ஜித் பகுதியைச் சேர்ந்த 30 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஹபீஸ் சயீத் ஆதரவாளர்களுக்கு சிறை தண்டனை விதித்த பாக். நீதிமன்றம்!