சவுத்ரி சர்க்கரை ஆலை பணமோசடியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அக்.31ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே நாவஸின் மகள் மரியம் நவாஸ் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள சாதக அம்சங்கள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெற்றது. அதில் இரண்டு பேர் கொண்ட நீதிபதிகள் குழு, மரியம் நவாஸூக்கு பிணை வழங்கியது. இதுகுறித்து நீதிமன்ற அலுவலர் பேசுகையில், மரியம் நவாஸூக்கு மனிதாபிமான அடிப்படையில் அல்லாமல் வழக்கில் உள்ள சாதக அம்சங்களாலேயே ஜாமீன் வழங்கப்பட்டது எனக் கூறினார்.
மேலும் நீதிமன்றத்தில் மரியம் நவாஸின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மரியம் நவாஸூக்கு ஏற்கனவே அவென்ஃபீல்ட் ஊழல் வழக்கில் ஏழு வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டு, தற்போது அவர் பிணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘குரங்கு கையில் பூமாலை போல் ஸ்டாலின் கையில் திமுக’ - அன்புமணி விமர்சனம்!