உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தற்போது ஐரோப்பிய நாடுகளை மையமாக வைத்து கொரோனா பாதித்துவரும் நிலையில் நேற்று உலகில் நோய் பாதித்தோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் இத்தாலி நாட்டில் அதிகபட்ச உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 175 பேரும், ஈரானில் 97 பேரும், ஸ்பெயினில் 63 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் இதுவரை 80 ஆயிரத்து 844 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மூன்றாயிரத்து 199 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்ற நாடுகள் விவரம்:
இத்தாலி - 21 ஆயிரத்து 157 பேர் பாதிப்பு ஆயிரத்து 441 பேர் உயிரிழப்பு
ஈரான் - 12 ஆயிரத்து 729 பேர் பாதிப்பு 611 பேர் உயிரிழப்பு
ஸ்பெயின் - 5 ஆயிரத்து 753 பேர் பாதிப்பு 183 உயிரிழப்பு
பிரான்ஸ் - 3 ஆயிரத்து 661 பேர் பாதிப்பு 79 பேர் உயிரிழப்பு
அமெரிக்கா - 2 ஆயிரத்து 976 பேர் பாதிப்பு 60 பேர் உயிரிழப்பு
உலக சுகாதார மையம் கொரோனா வைரசை சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஆப்பிரிக்காவையும் கொரோனா வைரஸ் நோய் பாதிக்கத்தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: 'லாக் டவுன்'இல் ஸ்பெயின்: பிரதமரின் மனைவிக்கு கொரோனா உறுதி