வடகொரியா, தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடேயே நீண்ட நாள்களாக சண்டை இருந்து வந்தது. ஆனால், சமீப காலங்களாக இரு நாட்டினரும் அமைதியாக பயணித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது வடகொரியா தென்கொரியாவுடனான அனைத்துத் தொடர்பு வழிகளையும் மூடுகிறது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே தென்கொரியாவின் வெளியுறவு அமைச்சக நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும், பியோங்யாங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகளைப் புதுப்பிப்பதற்கும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்'' என்றார்.
இதையடுத்து, வடகொரியாவின் முக்கிய தொலைக்காட்சியில், இருதரப்புக்கும் இடையிலான உறவுகள் கட்டுப்படுத்தாத நிலையில் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் இருநாட்டுக்கும் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.