கிழக்கு கடலில் (East Sea) அமெரிக்காவுடன் தென் கொரியா மேற்கொண்டுவரும் ராணுவ கூட்டுப் பயிற்சியை எச்சரிக்கும் விதமாக, வடகொரியா நேற்று இரண்டு ஏவுகணைகளை சோதனையிட்டதாக தென் கொரியா தெரிவித்திருந்தது.
அதை உறுதிசெய்தும் வகையில், புதிதாக தயாரிக்கப்பட்ட குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ( Short-Range Ballistic Missiles) சோதனையிட்டதாகவும், வடகொரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள விமான தளத்தில் இருந்து ஏவுப்பட்ட அந்த ஏவுகணைகள், கிழக்கு கடல்பகுதியில் உள்ள ஒரு தீவை துல்லியமாக தாக்கியதாகும் வடகொரியா அரசு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. அதில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ராணுவத் தளபதிகளுடன் ஏவுகணை சோதனையை பார்வையிடும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து அதிபர் கிம் ஜாங் உன் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும், ராணுவ கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளை எச்சரிக்கும் விதமாக அமைந்ததாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.