நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில் ஓக்லாந்து வெனுயபாய் விமானப்படை தளம் அமைந்துள்ளது.
இந்த விமானப்படை தளத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அடையாளம் தெறியாத நபர் ஒருவர் நியூசிலாந்து காவல்துறைக்கு இன்று காலை எச்சரிக்கை விடுத்தார்.
இதன் அடிப்படையில், நியூசிலாந்து காவல்துறையினர் வெனுயபாய் விமானப்படை தளத்தில் அவசர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
விமானப்படை தளத்தைச் சுற்றிலும் பயங்கரவாதிகள் தடுப்பு பிரிவினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆம்புலன்ஸ் போன்ற அவசரநிலை ஊர்திகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விமான தளத்தைச் சுற்றியுள்ள சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நியூசிலாந்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.