பீஜிங் (சீனா): தொலைத்தொடர்பு சேவைக்கான புதிய செயற்கைக்கோளை சீனா விண்ணில் ஏவியுள்ளது.
Tiantong 1-03 என்ற புதிய செயற்கைக்கோள் Xichang மையத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது, கைப்பேசி தொலைதொடர்பு சேவையை பயனாளர்களுக்கு தடையில்லாமல் வழங்குவதற்கு இந்த செயற்கைக்கோள் பெரும் உதவியாக இருக்கும்.
சீனா அகாடமி ஆஃப் ஸ்பேஸ் டெக்னாலஜி உருவாக்கிய இந்த செயற்கைக்கோள் வானிலை மாற்றங்களால் ஏற்படும் தொலைதொடர்பு தடைகளை அகற்ற உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு மேலும் 21 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக Xichang செயற்கைக்கோள் மையம் தெரிவித்துள்ளது.