ETV Bharat / international

உள்ளிருந்து எழும் எதிர்ப்பு, கடின சூழலில் நேபாள பிரதமர்!

author img

By

Published : Jul 3, 2020, 7:28 AM IST

டெல்லி: ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழுவிலுள்ள (என்.சி.பி) அதிகமான உறுப்பினர்கள் அந்நாட்டின் பிரதமர் கே.பி. ஒலியின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ள நிலையில், இனிவரும் நாள்களில் அவர் தனது பதவிக்கு அதிக சவால்களை எதிர்கொள்ளப் போகிறார்.

நேபாள பிரதமர்
நேபாள பிரதமர்

காத்மாண்டுவில் புதன்கிழமை நடைபெற்ற நிலைக்குழு கூட்டத்தில் ஐந்து உறுப்பினர்கள் மட்டுமே பேசினாலும், அனைத்து உறுப்பினர்களும் பிரதமராக ஒலி தொடர்ந்திருப்பது குறித்து தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பெஷல் கதிவாடா, மாத்ரிகா யாதவ் மற்றும் லீலாமணி போக்ரெல் ஆகிய மூன்று தலைவர்கள் ஒலியிடம் ராஜினாமாவைக் கோரினார்கள் என்றும் நந்தா குமார் பிரசேன் மற்றும் யோகேஷ் பட்டரை ஆகிய இருவரும் அவரது செயல்பாட்டு முறையை சரிசெய்யும்படி அவரை வலியுறுத்தியதாக தி காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டம், உறுப்பினர்களின் கருத்துக்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டு வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவுக்கு ஆதரவானவராகக் கருதப்படும் ஒலியின் நடவடிக்கைகள், சமீப காலங்களில் இந்தியா-நேபாள உறவுகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த மாதம், ஒலி இந்திய எல்லைக்குட்பட்ட கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட இடங்களை நேபாளத்துடன் இணைத்து நாட்டின் புதிய அரசியல் வரைப்படத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

கைலாஷ் மானசரோவர் செல்லும் யாத்ரீகர்களுக்காக கட்டப்பட்ட லிபுலேக் வரை செல்லும் சாலையை இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மே மாதம் திறந்து வைத்ததை அடுத்து இது நிகழ்ந்தது. ஒலியின் நடவடிக்கையைத் தொடர்ந்து, அதை “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று இந்தியா வெளியுறவு அமைச்சகம் பதிலளித்தது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை, தன்னை பிரதமர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்ய இந்தியா முயற்சிப்பதாக ஒலி குற்றம் சாட்டினார்.

அப்போது, "நேபாள அரசியலின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் டெல்லியுடன் இணைந்து எல்லைப் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டிற்காக என்னை வெளியேற்ற முயற்சிக்கிறார்கள்" என்று ஞாயிற்றுக்கிழமை காத்மாண்டுவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒலி கூறியுள்ளார். மேலும், "என்னை வெளியேற்றுவதில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று யாரும் நினைக்கக்கூடாது" என்றார்.

அரசியல் நோக்கர்களின் கூற்றுப்படி, ஒலியின் நடவடிக்கைகள் நாட்டில் கோவிட்-19 தொற்றுநோயை மோசமாக கையாளும் விதத்தினால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வந்த எதிர்ப்பிலிருந்து உருவாகின்றன, மேலும் அவர் இவற்றை திசைதிருப்பும் தந்திரங்களாகப் பயன்படுத்துகிறார்.

செவ்வாக்கிழமை நடந்த நிலைக்குழுவின் கூட்டத்தில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத் தலைவரும், முன்னாள் பிரதமருமான புஷ்பா கமல் தஹால் “பிரசந்தா” மற்றும் மூத்த தலைவர்களான மாதவ் குமார் நேபாள், ஜலா நாத் கானல், பாம்தேவ் கவுதம், நாராயண் காஜி ஸ்ரேஸ்தா ஆகியோரோடு மேலும் 11 உறுப்பினர்கள் ஒலியை பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும்படி கோரினார்கள்.

புதன்கிழமை நிலைக்குழு கூட்டத்தைத் தொடர்ந்து, ஒலி தனது சொந்த கட்சிக்குள்ளேயே சிறுபான்மை பலத்துடன் உள்ளார், 45 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் 15 பேர் மட்டுமே அவருக்கு ஆதரவளித்துள்ளனர் என்று காத்மாண்டுவை சேர்ந்த அரசியல் பொருளாதார நிபுணர் ஹரி ரோகா ஈடிவி பாரத்-திடம் தெரிவித்தார்.

"அவர்கள் தொடர்ந்து தன்னை தூண்டிவிட்டால், தான் கட்சியைப் பிளவுப்படுத்தப் போவதாக பிரதமர் கூறுகிறார்," என்று ரோகா நேபாளத்தின் தலைநகரிலிருந்து தொலைபேசியில் பத்திரிகையாளரிடம் கூறினார்.

அவரை பிரதமராக்கியது நிலைக்குழு அல்ல என்ற அடிப்படையில் ஒலி தற்போது பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நாடுவார் என்று நம்பப்படுகிறது. ஒலி தனது இரண்டு பதவிகளில், பிரதமர் மற்றும் கட்சியின் இணைத் தலைவர், இவற்றில் ஒன்றை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஒலி பிரதமர் பதவியை இழந்தால், தஹலுக்கும் மற்றொரு முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபாளுக்கும் பிரதமர் மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவிகளைப் பகிர்ந்து கொள்வது சாத்தியமாகும் என்று ரோகா கூறினார்.

ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் தஹால் தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) ஆகிய இரண்டு இடதுசாரிக் கட்சிகளை ஒன்றிணைந்ததைத் தொடர்ந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 2018ல் ஆட்சிக்கு வந்தது.

டெல்லியை சேர்ந்த அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் மூத்த உறுப்பினரும் அண்டைநாடுகளின் பிராந்திய ஆய்வுகள் முயற்சியின் சிந்தனையாளருமான கே.ஹோமி, “நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இரண்டு அணிகள் பதவிக்காக உட்கட்சி போராட்டம் நடத்தி வருகின்றன, அதில் ஒரு அணி தஹலை ஆதரிக்கிறது” என்று கூறுகிறார். "கோவிட் -19 நெருக்கடியை ஒலி கையாண்ட விதத்தால் இரு முகாம்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் மோசமடைந்துள்ளன" என்று யோம் ஹோமி ஈடிவி பாரத்-திடம் கூறினார்.

இந்தியாவுக்கு எதிரான ஒலியின் வெளிப்படையான ஆக்கிரமிப்புக்கு மற்றொரு காரணம் நேபாளத்தின் அரசியல் இயக்கத்தில் வளர்ந்து வரும் சீனாவின் பங்கு என்றும் அவர் கூறினார். "நேபாளம் கடந்த காலத்தில் இந்தியாவுக்கு எதிராக சீனாவின் சீட்டை வைத்து விளையாடியது, ஆனால் அதை மறைத்து வைத்திருந்தது" என்று யோமி கூறினார்.

"ஆனால் மாறியது என்னவென்றால், கடந்த இரண்டு ஆண்டுகளில் பெய்ஜிங் வெளிப்படையாக விளையாடுகிறது, அது விளையாடுவதற்கு தயாராக உள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை நேபாளத்தின் புவிசார் அரசியல் இயக்கவியலை அது மாற்றியுள்ளது. ”

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் விருப்பமான பெல்ட் மற்றும் ரோடு முன்முயற்சியின் (பிஆர்ஐ) கீழ் நேபாளத்தில் நீர் மின் திட்டங்களிலும், காத்மாண்டுவிலிருந்து திபெத்தின் கெருங் வரையிலான ஒரு ரயில் பாதையிலும் சீனா முதலீடு செய்யத் தொடங்கியது.

மறுபுறம், காத்மாண்டு டெல்லியின் ஆதரவுடன் நடந்ததாகக் கூறப்படும் 2015ஆம் ஆண்டின் பொருளாதார தடைக்கு பின்னர் இமயமலை தேசத்தில் இந்தியா எதிர்ப்பு உணர்வுகள் அதிகரித்துள்ளன. ஒலி அரசாங்கம் இந்த உணர்வைப் பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றியது.

இந்தியா நேபாளத்தின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு உதவியாக இருந்தபோதும், இரு நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக மக்களிடத்திலும் கலாச்சார உறவுகள் இருந்தபோதிலும் இவை நடந்தேறியுள்ளது.

இதையும் படிங்க: தொடர் சர்ச்சைகள்; சொந்தக் கட்சிக்குள் எதிர்ப்பு - ராஜிநாமா செய்கிறாரா நேபாள பிரதமர்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.