நேபாளத்தில் சிந்துபால்சாக் மாவட்டத்தில் பேருந்து ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 98 பேர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் துலிகெல் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அலுவலர்கள் தரப்பில் கூறியாதாவது, "அதிகப்படியான பயணிகளைப் பேருந்தில் ஏற்றியதன் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம். மேலும் பேருந்தின் டயரும் பஞ்சராகி உள்ளது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் மோசமான சாலை காரணமாக அங்கு விபத்துகள் ஏற்படுவது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. இதனை நேபாள அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நாளுக்கு நாள் குரல்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க:
என் மேல் சுமத்தும் குற்றச்சாட்டு பொய்யானது - பரமேஸ்வரா விளக்கம்!