ஊழல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் உடல்நிலை கடந்த சில வாரமாக மோசமடைந்து வருவதாக அவரின் மகள் மரியம் நவாஸ் ஷெரீப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு அவர் தரப்பில் கோரிபட்டிருந்தது. அதை ஏற்ற இஸ்லாமாபாத் உச்ச நீதிமன்றம், ஆறு வாரங்களுக்கு நாட்டை விட்டு வெளியேராமல் மருத்துவ பரிசோதனைக்கு செல்லலாம் என்று உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. அதன்படி இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் நவாஸ் ஷெரீப்.
உடல்நிலையை காரணம் காட்டி சிறையிலிருந்து விடுவிக்குமாறு கோரிய அவரின் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு தள்ளுபடி செய்திருந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.