மியான்மரில் பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக, அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்டோரை ராணுவம் சிறைப்பிடித்து வைத்துள்ளது. மேலும் அங்கு உரிய அனுமதியின்றி விமானங்களை இயக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில், இணைய சேவைகள் முடக்கப்பட்டுவருகின்றன.
ராணுவத்தினரின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு உலகம் முழுக்க கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது, ராணுவத்தினர் தடியடி நடத்திவருகின்றனர். கடந்த பிப். 28 மக்களின் உரிமை போராட்டத்தை ராணுவத்தினர் அடக்க முயன்றதால், அப்பகுதியே போர்க்களமாக மாறியது. அதில், 18 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் நேற்று(பிப்.3), யாங்கூன், மண்டாலா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில், சுமார் 33 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் படுகாயமைடந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மீது ராணுவம் நடத்தி வரும் அத்துமீறல் செயலுக்கு, அமெரிக்கா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இதையும் படிங்க: கோடான கோடி 'ஹலோ'க்களுக்கு காரணமான கிரஹாம் பெல்லை நினைவுகூர்வோம்...