இன்றும் நாளையும் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா சார்பாக பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இன்று பேசிய மோடி, "பயங்கரவாதத்திற்கு எதிராக போராட அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். இளைஞர்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனை பரவுவதை தடுக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர், " நான் இலங்கைக்கு சென்றிருந்தபோது புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு சென்றிருந்தேன். அங்கு நான் பயங்கரவாதத்தின் கோர முகத்தைக் கண்டேன். பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்து ஊக்குவிக்கும் நாடுகள் அதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்" என்றார்.
பயங்கரவாதத்தை வளர்க்க பாகிஸ்தான் நிதி உதவி செய்கிறது என தாக்கிப் பேசிய மோடி,கடந்த இரண்டு வருடங்களாக ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் நிரந்திர உறுபினராக இருந்துவரும் இந்தியா பல்வேறு நல்ல திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
ரஷ்ய அதிபர் விளாதிமர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, ஈரான் அதிபர் ஹாசன் ருஹானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.