ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரஸ், ஐநா தலைமை ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த 31 அமைப்புகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இது குறித்து அன்டோனியா குட்டரஸ், 'கோவிட்-19 பெருந்தொற்றுக்கு உடனடியான நடவடிக்கை என்பதைத் தாண்டி, மனித உரிமைகள், சர்வதேச ஒத்துழைப்பு, உலகளாவிய நிர்வாகம் ஆகியவற்றில் உண்டாகும் நெருக்கடிகள் ஆகியவை பல நாடுகளை எதிர்காலத்தில் வழிநடத்தும். இந்தப் பெருந்தொற்றால் தெளிவாக விளங்கியது, மனித குலத்தின் பலவீனம்தான். விஞ்ஞானத்தில் வளர்ந்திருந்தபோதும், ஒரு வைரஸைக் கையாள நமக்குத் தெரியவில்லை. அதற்கு நாம் தயாராகவில்லை.
உலகில் போதுமான அளவில் மனிதநேயம், ஒற்றுமையில்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது' என்றார்.
உலகப் பொருளாதார நிலை குறித்து ஐநா உறுப்பினரும், உலக வங்கியின் தலைவருமான டேவிட் மால்பாஸ் மற்றும் சர்வதேச நிதியத்தின் மேலாண் இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா ஆகிய இருவரும் கூறும்போது, 'கரோனாவினால் பொருளாதாரம் அதிக நெருக்கடியைச் சந்திக்கிறது. கடந்த நான்கு வாரங்களில் இருந்ததைவிட, தற்போது பொருளாதாரம் மந்தநிலைக்கு வந்திருப்பது வறுமையையும், சமத்துவமின்மையையும் உண்டாக்கும்' என எச்சரித்துள்ளனர்.
தொடர்ந்து பேசிய மால்பாஸ், 'வளரும் நாடுகள் இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க கடனுதவி அளிக்க முன்வர வேண்டும். பெரிய அளவில் பொருளாதார திறப்பு இருந்தால்தான், வறுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்' என்றார்.
இதையும் படிங்க: 'சாப்பிட மூங்கில் இல்லைங்கோ...' சீனாவுக்கு பேக்கிங் ஆகும் பாண்டா கரடிகள்!