இது குறித்து மலேசியாவின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் என்னும் செய்தித்தாளில் வெளியான தகவலில், "மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின், அந்நாட்டு சுகாதார மற்றும் அறிவியல் அமைச்சக உயர் அலுவலர்களுக்கு, கோவிட்-19 தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் நாட்டின் 70 விழுக்காடு மக்களுக்குத் தேவையான கோவிட் தடுப்பூசிகளை வாங்க ஒப்பந்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே மலேசியா சுகாதாரத் துறை, 12.8 மில்லியன் கோவிட்-19 தடுப்பூசிகள் வாங்க அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசருடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்மூலம் 30 விழுக்காடு மக்களுக்குத் தடுப்பூசிகள் வழங்க முடியும். மேலும் மலேசியா சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, அந்நாட்டில் தற்போது 83,475 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மலேசிய பிரதமரை ராஜினாமா செய்யக்கோரும் எதிர்க்கட்சிகள்!