தாய்லாந்து நாட்டில் 69 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அரசர் முடிசூட்டு விழா நடைபெறுகிறது.
முதல் நாளான நேற்று மறைந்த முன்னாள் அரசர் புமிபோல் அதுல்தேஜின் மூத்த மகனான மஹா வஜ்ராலங்கோர்ன், தாய்லாந்தின் புதிய அரசராக முடிசூடிக்கொண்டார். வெள்ளை அங்கியில் எளிமையாக வந்த மஹா வஜ்ராலங்கோர்ன், 'கிராண்ட் மாளிகையில்' புனித நீராடிக் கொண்டபின், மேள தாளங்களும், பீரங்கி குண்டுகளும் முழங்க அரசராக முடிசூடிக்கொண்டார்.
முடிசூட்டு விழா அட்டவணை:
புனித நீராட்டு விழா: தாய்லாந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது அரசர் மீது ஊற்றப்பட்டது.
முடிசூடும் விழா: நாட்டின் அரியணை, வாளும் ஆகியவை அரசருக்கு வழங்கப்பட்டது.
புத்த மத ரச்கன்: பாங்காக்கில் உள்ள பிரசித்தி பெற்ற எமலால்டு புத்தா் கோயிலில், அரசர் தன்னை புத்த மதத்தின் ரட்சகனாக அறிவித்துக் கொண்டார்.
அரண்மை குடியேற்றம்: அரண்மனைக்கு இன்று(மே.5) அரசர் குடிபெயருகிறார்.
ஊரை வளம்ரும்விழா : பாங்காக் நகரைச் சுற்றி அரசர் நாளை வலம்ம் வருவார்.
கிராண்ட் மாளிகையின் பால்கனியலிருந்து மக்களிடம் உரையாற்றும் அரசர், பின்னர் பல்வேறு நாட்டு தூதர்களுடன் உரையாற்றுவார்.
மஹா வஜ்ராலங்கோர்ன் குறித்து சில தகவல்கள்:
தாய்லாந்து முன்னாள் அரசர் புமிபோல் அதுல்யாதெஜ் ( Bhumibol Adulyadej) மற்றும் அரசி சிரிக்கிட் ஆகியோரின் மூத்த மகனாக பிறந்தவர்தான் அரசர் வஜ்ராலங்கோர்ன்.
1972ஆம் ஆண்டு, நாட்டின் அரச வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
தொடர்ந்து, ஆஸ்திலேரியா தலைநகர் கென்பேராவில் உள்ள ராயல் மிலிட்டரி கல்லூரியில் பயின்ற இவர், தாய்லாந்து ராணுவத்தில் பணியாற்றினார்.
இவரை ராமா எக்ஃஸ் (Rama X) என்றும், சக்ரி ராஜவம்சத்தின் 10வது அரசர் என்றும் அழைக்கப்படுகிறார்.