வரிசையில் நிற்பதை மனிதர்கள் பெரும் கஷ்டமாகத்தான் நினைப்பார்கள். 'எப்படா கேப் கிடைக்கும் முந்திச் செல்லலாம்' என நினைக்கும் மாந்தர்தான் அதிகம். அப்படிப்பட்டவர்கள் பாடம் கற்கும் வகையில், ட்விட்டரில் காணொலி ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், சிங்கப்பூர் விமான நிலையத்தில், கன்வேயர் பெல்ட் வழியாக வரும் லக்கேஜ்கள் வரிசையாக வந்துகொண்டிருக்கும். அப்போது, இரண்டு பாதைகளில் வரும் சூட்கேஸ்கள் ஒரே இடத்தில் சந்திக்கும்போது, பொறுமையாக காத்திருந்து மற்ற சுட்கேஸுக்கு வழிவிட்டுச் செல்லும்.
நாம் நினைக்கலாம் இது செட்டிங்ஸ்தானே என்று! ஆனால், அதை நோக்காமல் அதனால் நாம் என்ன கற்கலாம் என்று சிந்திப்பதே சரியாக இருக்கும். இந்த இடத்தில் நாம் 'பொறுத்தார் பூமியாழ்வார்!' என்ற பழமொழியை நினைவுகூர்ந்தே ஆக வேண்டும். ஏன் திருவள்ளுவர் கூட, ஒரு இடத்தில் பொறுமை கடலினும் பெரிது என்று கூறியுள்ளார். அதனால் ஒவ்வொருவரும் இந்த சூட்கேஸ் கற்றுக் கொடுக்கும் பாடத்தை உள்வாங்கிச் செயல்பட்டால் சிறப்பாக இருப்போம்.
-
Singapore’s Changi airport - where the baggage is polite, has manners https://t.co/7Q408FnFK3 pic.twitter.com/mm4FMlCO8m
— Channa Prakash (@AgBioWorld) December 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Singapore’s Changi airport - where the baggage is polite, has manners https://t.co/7Q408FnFK3 pic.twitter.com/mm4FMlCO8m
— Channa Prakash (@AgBioWorld) December 2, 2019Singapore’s Changi airport - where the baggage is polite, has manners https://t.co/7Q408FnFK3 pic.twitter.com/mm4FMlCO8m
— Channa Prakash (@AgBioWorld) December 2, 2019
தற்போது, சமூக வலைதளங்களில் இந்த சூட்கேஸ் காணொலி வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: "இந்த 13 பொருட்கள் விமானத்தில் எடுத்துட்டு செல்லக்கூடாது" - தடை விதித்த துபாய் போலீஸ்!