கராச்சி: பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி மாகாணத்தில் வசிக்கும் இந்துக்கள் நேற்று மகிழ்வுடன் ஹோலி புனித திருநாளை கொண்டாடினார்கள். முன்னதாக இந்துக்கள் அங்குள்ள சுவாமிநாராயணன் கோயிலில் வழிபாடு நடத்தினார்கள்.
தொடர்ந்து வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து இரவில் வாண வேடிக்கையும் நிகழ்த்தப்பட்டன. ஹோலி பண்டிகை குறித்து ஒவ்வொரிடத்திலும் ஒவ்வொரு நம்பிக்கை உள்ளது.
குறிப்பாக ஹோலியை இருளை அகற்றும் பண்டிகையாக நம்புகின்றனர். அந்த வகையில், இது தீமையின் தோல்வியையும் நன்மையின் வெற்றியையும் குறிக்கிறது. இது ஒரு பாரம்பரியமாக கொண்டாடப்படும் இந்து திருவிழா என்றாலும், இஸ்லாமியர்கள் உள்பட பிற மதங்களை சேர்ந்தவர்களும் ஹோலி பண்டிகையின்போது பங்கேற்பை காணமுடிகிறது.
இவர்கள், ஒற்றுமை மற்றும் நட்பின் செய்தியை ஹோலி கொண்டு வருவதாகவும், மத இணக்கத்துக்கு பாலமாக இருப்பதாகவும் இந்துக்கள் நம்புகிறார்கள்.