கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜப்பானில் பணிகளுக்கான காலியிடங்கள் 2020ஆம் ஆண்டு குறைந்தது. 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கரோனாவுக்கு மத்தியில் வேலைவாய்ப்பின்மை கடுமையாக உயர்ந்தது.
இது குறித்து ஜப்பான் தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பணி கிடைக்கக்கூடிய நிலை 0.42 புள்ளிகள் குறைந்து 1.18ஆக உள்ளது. அதாவது, 100 பேர் பணியைத் தேடும்பட்சத்தில் 118 காலியிடங்கள் உள்ளன.
இதேபோல், கடந்த 1975ஆம் ஆண்டு, 0.59 புள்ளிகள் குறைந்து. 2014ஆம் ஆண்டிலிருந்து முதல்முறையாக பணி கிடைக்கக்கூடிய நிலை பெரிய அளவில் சரிந்துள்ளது.
2009ஆம் ஆண்டிலிருந்து முதல்முறையாக 2020ஆம் ஆண்டு, வேலைவாய்ப்பின்மை 0.4 புள்ளிகள் உயர்ந்து 2.8 விழுக்காடாக இருந்தது. 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாதோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 90 ஆயிரம் உயர்ந்து 1.91 மில்லியனாக உள்ளது. அதேபோல், பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 80 ஆயிரம் குறைந்து 66.76 மில்லியனாக உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.