மாஸ்கோ: உலகம் முழுவதும் சுற்றும் கோடீஸ்வரர்கள் அலுத்துவிட்டது என்று விண்வெளிக்கு சுற்றுலா செல்ல தொடங்கிவிட்டனர். அந்த வகையில், ஜப்பான் நாட்டில் கோடீஸ்வரரான யுசாகு மெசாவா என்பவர், ரஷ்ய விண்கலம் மூலம் கடந்த 8ஆம் தேதி விண்வெளி சுற்றுலா சென்றார். அவருடன் உதவியாளர் யோசோ ஹிரானோ, ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் மிசுர்கின் இருவரும் சென்றிருந்தனர்.
12 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த மூவரும், இன்று கஜகஸ்தான் நாட்டிலுள்ள விண்வெளி தளத்தில் தரையிறங்கினர். இதுகுறித்து மெசாவா, "விண்வெளிக்கு சென்றால் மட்டுமே, அதன் அற்புதமான அனுபவத்தைப் புரிந்துகொள்ள முடியும். இதற்கான செலவுத் தொகையை ஊடகங்கள் யூகிக்க தொடங்கிவிட்டன. ஆனால், அதை நான் வெளியில் சொல்ல முடியாது" எனத் தெரிவித்தார். இருப்பினும் அவர் ர் ரூ.350 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட ராய் புயல்; 208 பேர் பலி... 50 பேர் மாயம்...