ஜப்பானை சேர்ந்த மின்னணு தயாரிப்பு நிறுவனங்களான என்.இ.சி., கார்டிவேடாரின் ஒருங்கிணைந்த முயற்சியால் மின்சாரத்தில் இயங்கும், பறக்கும் காரை அறிமுகப்படுத்தியுள்ளன.
டொயோட்டா, பிரபல வீடியோ கேம் நிறுவனமான பன்டாய் நாம்கோ ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உதவியோடு உருவாக்கப்பட்ட இந்த பறக்கும் காரை, நேற்று முன்தினம் சோதனை செய்தனர். ஆளில்லா விமானம் போல் நான்கு இறக்கைகளுடன் காட்சிளித்த பறக்கும் கார், தரையில் இருந்து சுமார் மூன்று மீட்டர் உயரத்தில் வானில் வட்டமிட்டபடி பறந்து சென்றது. பாதுகாப்பு கருதி சோதனை ஓட்ட பகுதியை சுற்றி குண்டு அமைக்கப்பட்டிருந்தது.
2030ஆம் ஆண்டுக்குள் இந்த பறக்கும் கார் பயன்பாட்டுக்கு வரும் என்றும், இதன் போக்குவரத்துக்கு பாதுகாப்பான கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் என்.இ.சி நிறுவனத்தின் துணைத் தலைவர் நொரிஹிரோ இஷிகுர தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2017ஆம் ஆண்டு கார்டிவேடார் நிறுவனம் மேற்கொண்ட பறக்கும் கார் சோதனை ஓட்டம் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.