கரோனா பெருந்தொற்று அதிகமாக பரவியதாகக் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் புதியதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக அவசரகால நிலை தளர்த்தப்படும் என தெரிகிறது.
இது குறித்து பொருளாதார அமைச்சர் யசுடோஷி நிஷிமுரா, “அவசர கால நிலையை நீக்குவது குறித்து கரோனா வைரஸ் ஆலோசனை குழுவுடன் ஆலோசிக்கப்பட்டது. அக்குழுவின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், அரசாங்க அங்கீகாரத்திற்கு கோரப்பட்டுள்ளது. ஜப்பானில் லட்சம் பேரில் 0.5 என்ற விகிதத்தில் கரோனா பெருந்தொற்று பதிவு செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், பொருளாதார மீட்டுருவாக்கம் செய்ய அவசரகால நிலை நீக்கப்படுகின்றது” என்றார்.
ஜப்பானில் பெரும்பாலான இடங்களில் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. எனினும், தலைநகரான டோக்கியோ, வடக்கு தீவான ஹொக்கைடோ, கனாகாவா (Kanagawa), சாய்டாமா (Saitama), சிபா (chiba) ஆகிய மாகாணங்களில் அவசரகால நிலை ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கின்றது.
கோவிட்-19க்கு என அமைக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவின் கருத்தைக் கேட்டறிந்த பிறகு, அவசர கால நிலையைத் தளர்த்துவது பற்றி பிரதமர் ஷின்ஸோ அபே அறிவிப்பார். ஒருவேளை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், முதல்கட்டமாக பள்ளிகள், விளையாட்டு வசதிகள், அரும்பொருளகங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்படலாம். ஆனாலும் குறைந்த எண்ணிக்கையில் மக்களை அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் நீடிக்கலாம். மதுக் கூடங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகியன மறுஅறிவிப்பு வரும் வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'வூஹான் ஆய்வகங்களில் கரோனா உள்ளது உண்மைதான்; ஆனால்...?'