ஜப்பானில் தென்மேற்கு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் அங்கு வசிக்கும் 6,70,000 -க்கும் அதிகமான மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வடக்கு கியூஷுவில் உள்ள சாகா, ஃபுகுயோகா , நாகசாகி ஆகிய பகுதிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கனமழையால் கியூஷு பிராந்தியத்தின் சாகா பகுதியில், பிரதான ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கி காணப்பட்டன. அதுமட்டுமின்றி நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.மேலும் மூன்றுபேர் இந்த கனமழை காரணமாக உயிரிழந்தனர் எனவும் ஒருவர் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
.