கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறியும் சோதனை முறைக்கான நேரத்தை புதிய கண்டுபிடிப்புகள் மூலம் குறைத்து வருகின்றனர். அந்த வகையில், ஜப்பான் அரசு கரோனா பாதிப்பினைக் கண்டறிய ரேபிட் ஆன்டிஜென் சோதனைக் கருவிகளைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
நாசோபார்ன்ஜியல் மாதிரியை (nasopharyngeal sample), அதாவது நாசித்தொண்டை மாதிரியை எடுக்கும் ரேபிட் ஆன்டிஜென் சோதனைக் கருவிக்கு, தொற்றை உறுதிசெய்ய ஆய்வகம் தேவையில்லை. பொதுவாகப் பயன்படுத்தப்படும் முறையான பிசிஆர் (polymerase chain reaction) மாதிரி இல்லாமல், அரை மணி நேரத்திற்குள் பாதிப்பு முடிவைக் கண்டறிந்துவிடும்.
இந்தக் கருவி உற்பத்தியாளர் புஜிரெபியோ (Fujirebio), வாரத்திற்கு சுமார் 2 லட்சம் யூனிட்டுகளை வழங்குவதில் உறுதியாக உள்ளார். அதன்படி, ஜப்பானில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் ரேபிட் ஆன்டிஜென் சோதனைக் கருவிகள் இருக்கும் என்றும்; மாதந்தோறும் 3 ஆயிரம் சோதனைகளைச் செய்யமுடியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஆப்கன் மருத்துவமனை தாக்கப்பட்டதற்கு ஐநா கண்டனம்!