ETV Bharat / international

மலேசியாவின் புதிய பிரதமர் பதவியேற்பு! - மலேசியாவின் புதிய பிரதமர்

மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் பொறுப்பேற்றுள்ளார்.

Ismail Sabri Yaakob sworn in as new Prime Minister of Malaysia
மலேசியாவின் புதிய பிரதமர் பதவியேற்பு!
author img

By

Published : Aug 21, 2021, 3:43 PM IST

கோலாலம்பூர்: மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் யாகோப் பிரதமராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதற்கான அறிவிப்பை மலேசிய மன்னர் அப்துல்லா, நேற்று (ஆகஸ்ட் 20) வெளியிட்டார்.

கடந்த திங்களன்று முகைதின் யாசின் தனக்கு பெரும்பான்மை இல்லை என்பதை ஒத்துக்கொண்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட மலேசிய மன்னர், புதிய பிரதமரை தேர்வு செய்யும்வரையில், முகைதின் யாசின் இடைக்காலப் பிரதமராக இருப்பார் என அறிவித்தார்.

இந்நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதமர், நாட்டை நீண்ட காலமாக ஆட்சி செய்த கட்சியான ஐக்கிய தேசிய மலாய்காரர்கள் அமைப்பைச் சேர்ந்தவர். இவர், மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்த நிலையில், தற்போது புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானிலிருந்து ஏஞ்சலினா ஜோலிக்கு வந்த கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.