ETV Bharat / international

கல்முனை துப்பாக்கிச் சூடு: ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு? - sri lanka bomb blast

கொழும்பு: இலங்கை கல்முனைப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

sri lanka
author img

By

Published : Apr 28, 2019, 10:33 AM IST

Updated : Apr 28, 2019, 10:39 AM IST

இலங்கையில் கடந்த ஞாயிறன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் இதுவரை 253 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பொது இடங்களில் ஆங்காங்கே வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் ஐஎஸ் அமைப்பு எப்போதும் ஒரு தாக்குதலுக்கு தாமதமாக பொறுப்பேற்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி ஆகிய அமைப்புகள் மீது அந்நாட்டு அரசாங்கம் குற்றம்சாட்டி தடை விதித்துள்ளது.

இதற்கிடையே, அம்பாறையில் இருக்கும் கல்முனைப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது.

இதில், ஆறு ஆண்கள், மூன்று பெண்கள், ஆறு சிறுவர்கள் என மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இலங்கையில் மேலும் பரபரப்பையும், பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கல்முனைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Intro:Body:Conclusion:
Last Updated : Apr 28, 2019, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.