ETV Bharat / international

வெடித்துச் சிதறும் எரிமலை: இந்தோனேசியாவில் பீதி - இந்தோனேசியா நிலநடுக்கம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சக்திவாய்ந்த மிராபி எரிமலை திடீரென வெடிக்கத் தொடங்கியுள்ளதால், அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Volcano
Volcano
author img

By

Published : Mar 3, 2020, 3:14 PM IST

பசிபிக் பெருங்கடல் பகுதியின் தீவு தேசமான இந்தோனேசியாவில் தீவிரமான இயற்கைப் பேரிடர்கள் தொடர்ச்சியாக ஏற்படுவதுண்டு. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் சுமார் 1.3 லட்சம் பேர் உயிரிழந்தது உலகையே உலுக்கியது. எரிமலை பிரதேசமாக இந்தோனேசியா உள்ளதால் பூகோள ரீதியாகவே நிலநடுக்கம், சுனாமி அபாயம் கொண்ட பகுதியாக இப்பகுதி உள்ளது.

தற்போது அங்குள்ள மிராபி எரிமலை வெடிக்கத்தொடங்கியுள்ளதால் மீண்டும் நிலநடுக்க பீதி உருவாகியுள்ளது. சுமார் 3,000 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலை, நேற்று முதல் கரும்புகையை கக்தத் தொடங்கி அனல் சாம்பலை வெளியிட்டுவருகிறது. இதனால் வெளியேறும் வாயு சுமார் இரண்டு கி.மீ. உயரத்திற்கு சூழ்ந்து சுற்றுவட்டார கிராமங்களை அச்சுறுத்திவருகிறது.

2010ஆம் ஆண்டு இதுபோன்ற எரிமலை வெடிப்பின்போது 353 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தோனேசியாவில் வாழும் சுமர் இரண்டு கோடி பேர் பூகம்பம், சுனாமி பீதியில் உள்ளனர்.

இதையும் படிங்க: இறந்தவர்களின் சாம்பலை சேமிக்கும் உலகின் ஒரே வங்கி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.