காத்மண்டு (நேபாளம்): வேக்சின்மைத்ரி திட்டத்தின் மூலம் இந்தியாவிலிருந்து 10 லட்சம் கோவிட்-19 தடுப்பூசிகள் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் தடுப்பூசிகள், முதலில் சுகாதார முன்கள பணியாளர்களுக்கு போடப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஹிருதயேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார். இந்திய - நேபாள உறவின் விளைவாக இந்தத் தடுப்பூசி இலவசமாக இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் தனது அறிக்கையில் அமைச்சர் கூறியுள்ளார்.
கோவிட்-19 தடுப்பூசி: கர்நாடக மாநிலம் முதலிடம்!
இந்தியாவிலிருந்து பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர், செஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இலவசமாக ஜனாரி 20ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் வழங்கப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கரோனா தீவிரமாக பரவிய காலத்தில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின், ரெம்டெசிவிர், பாராசிட்டாமால் மாத்திரைகள், காய்ச்சல் கண்டறியும் கருவிகள், செயற்கை சுவாசக் கருவிகள், முகமூடிகள், கையுறைகள், பிற மருத்துவ பொருட்களை ஆகியவற்றை ஏராளமான நாடுகளுக்கு வழங்கியிருந்தது நினைவுகூரத்தக்கதாகும்.