ETV Bharat / international

ராமர் கோயில் பூமி பூஜை குறித்த பாகிஸ்தான் விமர்சனத்துக்குப் பதிலளித்த இந்தியா! - இந்தியாவின் உள்விவகாரங்களள்

இந்தியாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிட வேண்டாம் என ராமர் கோயில் பூமி பூஜை பற்றிய பாகிஸ்தானின் விமர்சனத்திற்கு இந்தியா பதிலளித்துள்ளது.

india-rejects-pakistans-criticism-of-launch-of-construction-of-ram-temple

author img

By

Published : Aug 6, 2020, 7:18 PM IST

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றது, அரசியல் தலைவர்களிடையெ விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இதனிடையே பூமி பூஜை தொடர்பாக பாகிஸ்தான் இந்தியாவை விமர்சித்திருந்தது. இதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், ''இந்தியாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிட வேண்டிய அவசியமில்லை. இந்தியாவின் உள் விவகாரம் பற்றி பாகிஸ்தானின் அறிக்கையைப் பார்த்தோம். இனி இந்திய விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் வகுப்புவாத தூண்டுதல்களிலும் ஈடுபட வேண்டாம்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம், சொந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மையினரின் உரிமைகளை மறுக்கும் செயல்களில் ஈடுபடும் நாட்டிடமிருந்து இதுபோன்ற நிலைப்பாடு எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை'' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஹிரோஷிமா அணு ஆயுதத் தாக்குதல் 75 ஆண்டு - கற்க வேண்டிய பாடம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.