பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாவித் மியான்தத், கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியா பாதுகாப்பான நாடு அல்ல என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் நடைபெற்றுவரும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பான ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இணையத்தில் அவர் பதிவேற்றியிருக்கும் காணொலியில், "இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களைப் புறக்கணிக்க ஐ.சி.சி.யை நான் கேட்டுக்கொள்கிறேன்.
பாகிஸ்தான் சார்பாக நான் பேசுகிறேன், இந்தியாவுடன் அனைத்து விளையாட்டு உறவுகளும் இடைநிறுத்தப்பட வேண்டும். எல்லா நாடுகளும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
முன்னதாக, 'பாகிஸ்தானைவிட இந்தியா மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்மிக்க நாடு' என்று எஹ்சன் மணி கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து ஜாவித் மியான்தத்தும் இதே கருத்தை முன்வைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான கராச்சி டெஸ்டில் பாகிஸ்தான் 263 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தத் தொடரை பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. 2009ஆம் ஆண்டு, இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அவர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது.
அதன்பின்னர் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவதை வெளிநாட்டு அணிகள் தவிர்த்துவந்தன. இந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி அங்கு தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணியின் 2020 அட்டவணை...