இந்திய வங்கதேசம் இடையே மைத்ரி எக்ஸ்பிரஸ் மற்றும் பந்தன் எக்ஸ்பிரஸ் என இரு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. மைத்ரி எக்ஸ்பிரஸ் கொல்கத்தாவிலிருந்து வங்கதேச தலைநகர் டாக்காவையும், பந்தன் எக்ஸ்பிரஸ் கொல்கத்தாவிலிருந்து வங்கதேசத்தின் குல்னா சிட்டியையும் இணைக்கிறது.
இந்த இரு பயணிகள் ரயிலும் நாளை (மார்ச்15) முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15ஆம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு நிறுத்திவைக்கப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் பேருந்து சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் மாகாணத்தில் அறிமுகமான கொரோனா (கோவிட்-19) வைரஸ் தொற்று இந்தியாவில் 82 பேருக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த வைரஸ் தொற்றுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த எட்டு பேருக்கு பேருக்கு கொரோனா அறிகுறி!