இந்தியா, ஆப்கானிஸ்தானில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை நாடு கடத்தும் பொருட்டு, இரு நாடுகளுக்கும் இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் வினய் குமார், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இத்ரீஸ் ஸாமன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஆப்கானிஸ்தான், இந்தியா இடையே கைதிகளை பரிமாற்றிக்கொள்வதற்கு, ஏதுவாக 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்திற்கு ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் வினாய் குமார், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இத்ரீஸ் ஸாமன் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுவரை 37 குற்றவாளிகளை இந்திய நாடு கடத்தியுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.
சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக வரவேண்டும் - இலங்கை தமிழர்கள்