ETV Bharat / international

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு வட கொரியா எச்சரிக்கை! - north korea recent atomic nuclear missile test

வாஷிங்டன்: அணு ஆயுதம் குறித்து இனி மற்ற நாடுகள் கேள்வியெழுப்பினால் தங்களை தற்காத்துக்கொள்ள என்ன வேண்டுமென்றாலும் செய்யப்படும் என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு வட கொரியா எச்சரித்துள்ளது.

kim
author img

By

Published : Oct 8, 2019, 8:02 PM IST

வட கொரியா நாடு கடந்த வாரம் நீர்மூழ்கியிலிருந்து தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணையை (slbm - Submarine launched ballistic missile) சோதனை செய்தது. இதற்கு அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஏதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து ஐ.நா பாதுகாப்பு கூட்டத்தில் பிரிட்டன், ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆதரவோடு ஜெர்மனி இந்த விவாதத்தில் ஈடுபட்டது.

இது தொடர்பாக வட கொரியாவின் தூதர் கிம் சாங் தெரிவித்ததாவது, "அமெரிக்காவின் தூண்டுதலில் தான் எங்கள் நாட்டில் நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனை குறித்து ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் விவாதிக்க முற்பட்டுள்ளது. இனி இதுகுறித்து கேள்வியெழுப்பினால் நாங்கள் எங்களைத் தற்காத்துக்கொள்ள எதை வேண்டும் என்றாலும் செய்வோம்" என்று எச்சரிக்கை விடுக்கும் தொணியில் கூறியுள்ளார்.

2006ஆம் ஆண்டில் இருந்து இதுவரை வட கொரியா தொடர்ச்சியாக 6 அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. அதன் வெளிப்பாடாக 2017ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து அந்நாட்டுக்கு பொருளாதார தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 'உருத்தெரியாமல் அழித்துவிடுவோம்!' - துருக்கியை மிரட்டும் ட்ரம்ப்!

Intro:Body:

North korea warns european nations 

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.