காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 5ஆம் தேதி மத்திய அரசு நீக்கியது. மேலும், அம்மாநிலமானது இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரக, வணிக உறவுகளை முறித்துக்கொண்டது.
மேலும், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால், இதுவரை அந்நாடு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.
இந்நிலையில், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை நேற்றிரவு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார்.
காஷ்மீர் விவகாரம் குறித்து சவுதி இளவரசரிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசுவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.