பணவீக்கம், மெதுவான வளர்ச்சி உள்ளிட்டவற்றால் பாகிஸ்தானில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை பிரதமர் இம்ரான்கான் மேற்கொண்டுவருகிறார். மேலும், சர்வதேச நாடுகளும் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன.
இந்நிலையில், பட்ஜெட்டை ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் அரசு நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இதனை, இம்ரான்கானின் நிதித் துறை ஆலோசர் டாக்டர் ஹாபீஸ் ஷெக் தாக்கல் செய்ய உள்ளார். இதற்கிடையே, உள்ளூர் நேரப்படி இன்று காலை 9 மணிக்கு, இது தொடர்பாக பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுடன் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பிரதமரின் இன்றைய உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.