பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இரு நாள்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், அதன் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அந்நாட்டின் எதி என்ற அறக்கட்டளையின் தலைவர் ஃபெய்சல் எதி என்பவரைக் கடந்த 15ஆம் தேதி இம்ரான் நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின் எதிக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து எதியுடன் தொடர்பில் இருந்த இம்ரானுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பரிசோதனையில் முடிவில் இம்ரானுக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை 10,503 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், இதுவரை 220 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஈரான் பீரங்கிக் கப்பல்களை சுட்டு வீழ்த்துங்கள் - அச்சுறுத்தும் டொனால்ட் ட்ரம்ப்