ETV Bharat / international

இந்தியா நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாகிஸ்தான் நல்ல நட்பு நாடாக இருக்கும் - இம்ரான்கான் - நாடாளுமன்ற தேர்தல்

இஸ்லாமாபாத்: இந்தியாவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் பாகிஸ்தான் நல்ல நட்புறவுடன் இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இம்ரான்கான்
author img

By

Published : Mar 15, 2019, 11:14 AM IST

கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 40 க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத குழுவினர் தாக்குதலில் உயிரிழந்தபோதும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்தன.

இதுகுறித்து இம்ரான்கான் தெரிவித்துள்ளதாவது, "இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் குறைந்து நல்ல நட்புறவை கொண்டிருக்கும். அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான புதிய பாதையில் முதல் படியை பாகிஸ்தான் எடுத்துள்ளது. இந்தியா உட்பட அதன் அண்டை நாடுகளுடன் நல்ல நட்புறவு இருக்கும்", என்று அவர் தெரிவித்தார்.

Imran khan
இம்ரான்கான்

பாகிஸ்தானை சேர்ந்த தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தானின் புதிய ஈ-விசா திட்டத்தின் மூலம் 175 நாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருகை இருக்கும் என ட்வீட் செய்திருந்தது.

இதுகுறித்து இம்ரான்கான் தெரிவித்ததாவது, "மிகவும் பழமை வாய்ந்த சீக்கியர்களின் புனித தலங்களான நாங்கானா சாஹிப் மற்றும் கார்த்தர்பூர் ஆகியவையும், காத்ஸ் ராஜ் உள்பட இந்து மத தலங்களும் பாகிஸ்தானில் உள்ளன. பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அடுத்த சீசன் துபாய்க்கு பதிலாக பாகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்படும். மேலும், 1960-ம் ஆண்டு வாக்கில் இருந்த நம்பிக்கையை அது புதுப்பிக்கும். அமைதியான பாகிஸ்தான் வளமான பாகிஸ்தானாக இருக்கும்", என்றும் அவர் அறிவித்தார்.

பாகிஸ்தான் சுற்றுலா பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக, ஈ-விசா வழங்கல் வசதி உள்ளிட்ட முக்கிய விசா சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. இந்த ஈ-விசா திட்டத்தின் துவக்கத்தில் சீனா, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம்மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு ஈ-விசா வசதி கிடைக்கும், பின்னர் 170 நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும். மேலும் 90 நாடுகளுக்கு வியாபார ரீதியான விசாக்களும் வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Intro:Body:

http://www.eenaduindia.com/news/national-news/2019/03/14224931/Pak-will-have-better-ties-with-India-after-polls-Imran.vpf

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.